தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி கிருஷ்ணகிரி நகரில் 10 இடங்களிலும், கலெக்டர் அலுவலகத்தைச் சுற்றிலும் உள்ள 9 அரசு அலுவலகம் என கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் நேற்று காலை முதல் மாலை வரை 19 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டச் செயலாளர் மணி தலைமை வகித்தார்.
வட்டத் தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் நடராஜன், மாவட்ட இணை செயலாளர் ஜெகதாம்பாள், மாவட்ட துணைத் தலைவர் மஞ்சுளா ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னாள் வட்ட பொருளாளர் சக்திவேல் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய பென்சன் திட்டத் தை ரத்து செய்ய வேண் டும். கொரோனா காலத் தில் முடக்கப் பட்ட அகவிலைப்படி, சரண்டர் விடு ப்பை மீண்டும் வழங்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, பகுதி நேர சிறப்பாசிரியர்கள், ஊர்புற நு£லகர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு கால முறை ஊதியத்தில் பணிபுரிபவர்களை கால முறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பு வதற்கு ஆக்க பூர்வமான அறிவிப்புகள், இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லாததைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.



