fbpx
Homeபிற செய்திகள்‘அனைவருக்கும் கல்வி’ திட்டம் ஆகாஷ் பைஜூஸ் தொடங்கியது

‘அனைவருக்கும் கல்வி’ திட்டம் ஆகாஷ் பைஜூஸ் தொடங்கியது

இந்திய அரசின் ஆசாதிகா அமிர்த் மஹோத்சவ் முயற்சியை கொண்டாடும் வகையில், தேர்வுத் தயாரிப்பு சேவைகளில் தேசிய அளவில் முதன்மையாக விளங்கும் ஆகாஷ் பைஜூஸ், உயர்கல்விக்கான தனியார் பயிற்சியில் மாணவிகளை சேர்ப் பதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒரு பெரிய உந்துதலை ஏற்பாடு செய்து வருகிறது.

‘அனைவருக்கும் கல்வி’ என்ற திட்டமானது புறக்கணிக்கப்பட்ட குடும் பங்களை சேர்ந்த 7ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் சுமார்ட 2,000 மாணவர்களுக்கு, குறிப்பாக மாணவிகளுக்கு இலவச நீட், ஜேஇஇ பயிற்சி மற்றும் உதவித்தொகைகளை வழங் குவதற்கான நாடு தழுவிய திட்டமாகும்.
இந்த வெளியீட்டு விழா இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் 45 இடங்களில் நடைபெற்றது.

டெல்லியில் நடந்த விழாவில், தலைவர் ஜே.சி.சௌத்ரி, நிர்வாக இயக்குனர் ஆகாஷ் சௌத்ரி மற்றும் சிஇஓ அபிஷேக் மகேஸ்வரி, ‘ஆகாஷ் பைஜூ’ஸ் மற்றும் மற்ற நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ஆன்தே மூல நிறுவனத்தின் அங்கமான ‘ஆகாஷ் பைஜூ’ஸ் இன் முன்னாள் மாணவர்களும் கலந்து கொண் டனர். கல்வியில் சாதனை படைத்த முன்னாள் மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பூங்கொத்து வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் படி, அடையாளம் காணப்பட்ட அனைத்து மாணவர்களும் இன்ஸ்டிட்யூட்டின் முதன்மையான ஸ்காலர்ஷிப் தேர்வான ஆகாஷ் பைஜூ வின் நேஷனல் டேலண்ட் ஹண்ட் தேர்வு – 2022 (ஆன்தே 2022), தேர்வில் கலந்து கொள்வார்கள்.

இது நவம்பர் 5-&13, 2022 க்கு இடையில் நாடு முழுவதும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் நடைபெற உள் ளது. சிறந்த 2,000 மாணவர்களுக்கு சிறப்பு பரிசீலனைகளின் அடிப்படையில் ஆகாஷ் பைஜூவின் மிகவும் விரும்பப் படும் நீட் மற்றும் ஐஐடி-ஜேஇஇ பயிற்சி திட்டங்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப் படும். பயனாளி மாணவர்களை கண்டறி வதற்காக, ஆகாஷ், தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ஜி.ஓ.க்களுடன் கூட்டு சேரும். அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகள் மற்றும் ஒற்றை பெற்றோர் (தாய்) இருக்கும் மாணவர்களை மட்டுமே பரிந்துரைக்க முடியும்.

‘ஆகாஷ் பைஜூ’ஸ் ஆனது கிட்டத்தட்ட 285+ மையங்களை கொண்ட பான் இந்தியா நெட்வொர்க்கை கொண்டுள்ளது. இது நாட்டிலுள்ள எந்தவொரு பயிற்சி நிறுவனத்திற்கும் இல்லாதது. ஒவ்வொரு மையமும் சரா சரியாக 9 வகுப்புகளை நடத்துகிறது.

படிக்க வேண்டும்

spot_img