fbpx
Homeபிற செய்திகள்கோவையில் பிரத்யேக எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரை திறந்த ஜென் பர்னிச்சர்

கோவையில் பிரத்யேக எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரை திறந்த ஜென் பர்னிச்சர்

ஜென் பர்னிச்சர் கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் தனது புதிய ஜென் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரை திறந்துள்ளது. இந்நிகழ்ச் சியில் பன்னாரி அம்மன் குழுமத்தின் தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம் மற்றும் சங்கர் – அசோசி யேட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டி.எஸ். ரமணி சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
3000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஜென் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர், இப்பகுதியில் அலுவலக இடங்களுக்கான பிரத்யேக மையங்களில் மிகப்பெரிய ஒன்றாகும். இந்த முதன்மை ஷோரூம், ஜென் பர்னிச்சரின் விரிவான அலுவலக தளபாடங்களை வாடிக் கையாளர்களுக்கு அறிமுகப் படுத்துகிறது.

இது குறித்து ஜென் பர்னிச்சரின் நிர்வாக இயக்குநர்களான விக்னேஷ் இளங்கோ மற்றும் பவித்ரா ஆகியோர் கூறுகையில், “ஜென் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர், புதுமை, தரம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.” என்றனர்.
இது குறித்து பன்னாரி அம்மன் குழுமத்தின் தலை வர் எஸ்.வி. பாலசுப்ர மணியம் கூறுகையில், “நவீன அலுவலக இடங்களை மறுவரையறை செய்ய தொழில்நுட்பத்தையும் வடிவமைப்பையும் ஒருங்கிணைக்கும் எங்கள் தனித்துவமான தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்“ என்றார்.

சங்கர் – அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டி.எஸ். ரமணி சங்கர் கூறு கையில், “தைவானில் இருந்து தளவாடங்களை வாங்கினோம்.
ஜென் பர்னிச்சரின் நிறுவனர் முருகன் அவர்களைச் சந்தித்தபோது அது மாறியது. அடுத்த தலைமுறையினரான விக் னேஷ் மற்றும் பவித்ரா, அதே ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஜென்னை மேலும் உயரத் திற்கு எடுத்துச் செல் வதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img