fbpx
Homeபிற செய்திகள்23 ஸ்டார்ட் அப்களுக்கு வழிகாட்டிய கோவை ஆலமரம் நிறுவனம்

23 ஸ்டார்ட் அப்களுக்கு வழிகாட்டிய கோவை ஆலமரம் நிறுவனம்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கும் கோவையை சேர்ந்த ஸ்டார்ட் அப் இன்குபேட்டர் நிறுவனமான ஆலமரம், அதனிடம் வழிகாட்டுதல்கள் பெற்று 23 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முன்னேறி உள்ளதை கொண்டாடும் விதமாகவும், இந்த நிறுவனங்கள் வழங்கக்கூடிய சேவைகள் பற்றி எடுத் துரைக்கவும் ‘டெமோடே’ எனும் நிகழ்வு கோவையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்தியா வின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்க ளில் ஒன்றான ஜோ ஹோ கார்ப்- பின் (ZohoCorp) இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் ஆலமரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அம்பி மூர்த்தி, பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

இதற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கள் சந்திப்பு நிகழ்வில் அம்பி மூர்த்தி, கோ ஜென் எனும் தனது நிறுவனத்தின் உதவியால் இயங்கும் ஆல மரம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான பணி இடத்தை வழங்கி உதவி வருகிறதாக கூறினார். இது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங் களின் படைப்புகளை காட்சிப்படுத்தவும், இந்த நிகழ்வில் பங்கேற்ற முதலீட்டாளர்கள் உள்ளிட்ட விருந்தினர்களிடம் உதவி களை பெறவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரி வித்தார்.
இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர் ஸ்ரீதர் வேம்பு பேசுகையில், “டெமோ டே” நிகழ்வில் பங்கேற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கண்டு தான் மிகவும் மகிழ்வதாக கூறினார்.

கோவையில் இயங்கும் ஆலமரம் போல பல ஸ்டார்ட் அப் இன்கு பேட்டர்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img