குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் யுகம் 2025 மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா மார்ச் 6 முதல் 8 வரை நடைபெற்று வருகிறது.
யுகம் 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, தென் இந்தியாவின் மிகப் பெரிய தொழில்நுட்ப கலாச்சார விழாக்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
தற்போது யுகம் 2025ல் முதல் முறையாக அதன் சொந்த மாஸ்காட்- “கும்பா” அறிமுகமாகிறது. இது மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த, பங்கேற்க மற்றும் வளர வழிவகுக்கும் ஒரு பரந்த தளமாகும்.
இதில் 33 தொழில் நுட்ப நிகழ்வுகள், 57 தொழில்நுட்பமற்ற நிகழ்வுகள், 21 கலாச்சார நிகழ் வுகள், இலக்கிய நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் இடம் பெறுகிறது. தொடர்ந்து தொழில்முனைவோர் மேடை, தொழில்நுட்ப ஆராய்ச்சி, பாதுகாப்பு தொழில் கண்காட்சி, பயில ரங்கங்கள் நடைபெறுகிறது.
இதில் ஜெகதீஷ் பகான், சங்கீதா சிந்தி பால், ஸ்டேன்லி ஜானி, பரத்வாஜ் ரங்கன் என பல சிறப்புரையாளர்கள் துறை வல்லுநர்கள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு தொடர்பான கலந்துரை யாடல்கள் நடைபெற்றது. இதில் பல கடைகள், உணவகங்கள் என இடம் பெற்றுள்ளது.
தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் மேம்பாடு, மூத்த குடிமக்கள் பராமரிப்பு, பாலின சமத்துவம், சமூக மேம்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகிறது.
யுகம் 2025 ஒரு சாதாரண விழாவாக இல்லாமல், உணர்வும், புத்தாக்கமும், மாற்றமும் ஒன்றிணையும் ஒரு அனுபவமாக உருவாக உள்ளது.



