fbpx
Homeபிற செய்திகள்சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி சார்பில் வியட்நாம் கல்வி சுற்றுலா

சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி சார்பில் வியட்நாம் கல்வி சுற்றுலா

கோவை பீளமேட்டிலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் எம்.பி.ஏ ஆர்வலர்களுக்காக பிப்ரவரி 25 முதல் 28 வரை வியட்நாம் கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.

ஹோசிமின் நகரில், பங்கேற்பாளர்கள் நகர்ப்புற நிலப்பரப்பு மற்றும் முன் பிருந்த காலனிய ஆட்சிக் கட்டிடக்கலையின் தலை சிறந்த படைப்பான மத்திய தபால் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அடையாளங்களை ஆராய்ந்தனர்.

வியட்நாமின் போர்க்கால வரலாறு மற்றும் அதன் மக்களின் மீள்தன்மை பற்றிய ஆழமான புரிதலை கூசி சுரங்கப் பாதைகள் விளக்கின.

தொடர்ந்து, வியட்நாம் ஆடை, ஜவுளி மற்றும் தொழில் நுட்பங்களுக்கான சர்வதேச வர்த்தக கண்காட்சியில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சி, மாணவர்கள் உலகளாவிய தொழில் தலைவர்களுடன் உரையாடவும், சமீபத்திய கண்டுபிடிப்புகளை ஆராயவும், மற்றும் ஜவுளித்துறையில் வளர்ந்து வரும் போக்குகள் போன்றவற்றைக் கற்றுக் கொள்ளவும் வழிவகுத்தது.

ஒட்டு மொத்தமாக, இந்த ஆய்வுச்சுற்றுலா ஒரு முழுமையான அனுபவமாக அமைந்தது. அதே நேரத்தில் கல்வி கற்றல் மற்றும் நிகள் உலக தொழில்துறை வெளிப் பாட்டிற்கு இடையிலான இணைப்பை இக்கல்விச்சுற்றுலா வலுப்படுத்தியது.

படிக்க வேண்டும்

spot_img