கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், ஜி.டி.நாயுடு டிரஸ்ட் மற்றும் சீப் மேக்கர்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில், உயர்கல்வி பயிலும் 42 மாணவ, மாணவியருக்கு ரூ.6.26 லட்சம் கல்வி உதவித்தொகையை கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் வழங்கினார்.
கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 11,353 மாணவர்களில் தேர்ச்சி பெற்ற 10,408 பேரில் 10,310 பேர் (99 சதவீதம்) உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். துணைத் தேர்வு எழுதிய 945 பேரில் 815 பேர் (86 சதவீதம்) உயர்கல்வியில் சேர்க்கப்பட்டு, மாநில அளவில் கோவை மாவட் டம் 2ம் இடம் பெற்றுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியோர், ஒற்றைப் பெற்றோர் மற்றும் பெற் றோர் இல்லாத 148 மாணவர்களின் உயர்கல்விக் காக மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை சுமார் ரூ.30 லட்சம் கல்வி உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியுள்ள 10 மாணவர்களுக்கு கல்லூரிகளின் ஒத்துழைப்புடன் இலவச உயர்கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 42 மாணவர்களுக்கு ரூ.6.26 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் சங்கீதா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



