ஆண்களுக்கான சிறந்த மற்றும் வசதியான உள்ளாடைகள் XYXX பிராண்ட் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை அதன் உள்ளாடைகளுக்கான முதல் விளம்பர தூதராக நியமனம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு XYXX நிறுவனம் சாஸ்.விசி, டிஎஸ்ஜி கன்ஸ்யூமர் பார்ட்னர்ஸ் மற்றும் சினெர்ஜி கேபிடல் பார்ட்னர்ஸ் ஆகியோரி டம் இருந்து 30 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் முதலீட் டாளராக கே.எல். ராகு லும் இணைகிறார்.
நிறுவனர் யோகேஷ் கப்ரா கூறுகையில், கேஎல் ராகுல் இந்திய கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமானவர் ஆவார். அவரது கடின உழைப்பும் சாதனையும் அனைவராலும் பேசப்படுகிறது. உங்கள் உள்ளுணர்வை நம்புவதற் கான பிராண்ட் நம்பிக்கையை அவர் எடுத்துக்காட்டுகிறார்.
எங்களின் முதல் பிராண்ட் தூதராக சிறந்த நபரான அவரை தேர்வு செய்திருப்பது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அவரை சந்தித்த நிமிடத்தில் இருந்தே எங்களுடன் இணைந்து அவர் பணியாற்றி வருகிறார் என்றார். கே.எல். ராகுல் கூறுகையில், இப்போது சில காலமாக XYXX உள்ளாடைகளை அணிந்து வருகிறேன்.
XYXX-ன் செயல்பாடு, அவர்களின் சித்தாந்தம் மற்றும் நெறிமுறைகள், அனைத்தும் அவர்களின் விதிவிலக்கான தயாரிப்புகளில் பிரதிபலிக் கின்றன. அவை சிறப்புமிக் கவையாக உள்ளன.
இது அவர்களின் அபரிமிதமான வளர்ச்சிப் பாதையை காட்டுவதோடு, அனைத்து பகுதிகளிலும் விரைவான விரிவாக்கம் மற்றும் வேகமாக வளர்ந்து வரும், விசுவாசமான வாடிக்கையாளர் தளம் ஆகியவற்றிலும் பிரதிபலிக்கிறது.
நவீன கால இந்தியர்களுக்கு சிறந்த உள்ளாடை அனுப வத்தை வழங்கும் இந்த பிராண்டின் விளம்பர தூதராக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது வாழ்க்கை முறையுடன் ஒத்துப்போகிறது.
XYXX நிறுவனத்தின் சிறந்த செயல்பாடுகளை பார்க்கையில் வரும் காலத்தில் ஆண்களால் விரும்பப்படும் பிராண்டு களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நான் நம் புகிறேன் என்றார்.
இந்த பிராண்ட் தயாரிப்புகள் அமேசான், மிந்த்ரா, அஜியோ மற்றும் அதன் இணையதளம் xyxxcrew.com உள்ளிட்ட 14 முக்கிய ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கின்றன.