fbpx
Homeபிற செய்திகள்உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 மூலம் அதிகளவு முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்கும்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 மூலம் அதிகளவு முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்கும்

நீலகிரி மாவட்டத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன் னோடியாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழில்களில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான கருத்தரங்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆகியோர் தலைமையில் நேற்று உதகை ஜெம் பார்க் ஓட்டலில் நடை பெற்றது.- மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் தலை மையில், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, எதிர்வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு சென்னையில் நடைபெறவுள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய நிலை யான மற்றும் நீடித்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடை வதில் இம்மாநாடு முக்கிய பங்கு வகிக்கும்.

ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை தேவையான உண்ண உணவு, உடுத்த உடை ஆகியவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உணர்வோடு நல்லாட்சி செய்து வருகிறார் நமது தமிழ்நாடு முதலமைச்சர்.

தொழில்துறையை பொறுத்தவரை தமிழ்நாட்டில் நிலவும் தொழில்துறைக்கு உகந்த சூழல் அமைப்பு, மேம்பட்ட உள் கட்டமைப்பு, திறமை வாய்ந்த பணியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், வணிக ரீதியான வசதிவாய்ப்புகள் ஆகியவை தொழில்துறையில் முதலீடு செய்பவ ருக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.

விண்வெளி, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண் ணறிவு, ஆட்டோமொபைல், மின் சார வாகனங்கள், ஜவுளி, தரவு பகுப்பாய்வு மற்றும் மேம்பட்ட பொருட்கள் உட்பட பல்வேறு துறை கள் அரசிடமிருந்து சிறப்பு கவனம் மற்றும் ஆதரவை பெற்று முதலீட்டு வாய்ப்புகளை பெற்றிட உலக முதலீட் டாளர்கள் மாநாடு 2024 முக்கிய தளமாக செயல்படும்.

மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்வில் காட்சிப்படுத்துவதற்கும், அதன் மூலம் வாங்குபவர், விற்பனையாளர் மற்றும் பல்வேறு பங்குதாரர்களை இணைக்கும் தளமாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு -2024 அமையவுள்ளது.

மேலும், இம்முத லீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களுக்கு அனைத்து விதமான அனுமதிகள் மற்றும் உரிமங்கள் ஆகியவற்றை அனைத்து துறைகளிடமிருந்து விரை வாக உரிய காலத்தில் பெற்றிட ஒற்றைச் சாளர தகவு வழியாக பெற்றுத் தர மாவட்ட தொழில் மையம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஜனவரியில் நடைபெற வுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை டிரில்லியன் டாலராக உயர்த்துவதற்காகவும், சுமார் 4 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாடு அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நமது மாவட்டத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முதலீட்டுக்கான இலக்காக ரூ.150 கோடி நிர்ணயிக்கப்பட்டு, இது வரை ரூ.117.81 கோடிக்கான 17 புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது.

நாம் இலக்கைவிட அதிகமாக முதலீடுகளை ஈர்க்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஏராளமான நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் உள்ளது. எனவே நமது மாவட்டத்திற்கு ஏற்றவாறு பல்வேறு புதிய தொழில்கள் துவங்குவதற்கு தொழில்நிறுவனங்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img