திருப்பூர் மாநகராட்சி 34-வது வார்டுக்கு உட்பட்ட பாளையக்காடு மாரியம்மன் கோவில் சாலையில், மாநகராட்சி பொது நிதி 2025-26 திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன.
பணியை திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், 34-வது வார்டு கவுன்சிலரும் தி.மு.க. வாலிபாளையம் பகுதி செயலாளருமான பி.ஆர். செந்தில் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் 34-வது வார்டு செயலாளர் பி.ஆர். இளங்கோ, உதவி செயற்பொறியாளர் ராம்மோகன் குமார், இளநிலை பொறியாளர் சுப்பையா, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



