பிரதமரின் தூய்மையான எரிசக்தி தொழில் நுட்பங்களில் ‘ஆத்மநிர் பார் பாரத்’ என்ற தொலை நோக்குப் பார்வைக்கு இணங்க, காற்றாலை திட்டங்களில் உள்ளூர் கூறுகள் பயன்பாட்டை தற்போதைய 64% அளவிலிருந்து 85% ஆக உயர்த்துமாறு, OEMகள் மற்றும் கூறு உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட காற்றாலை ஆற்றல் துறையை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தினார்.
மாறிவரும் உலகளாவிய சூழ்நிலை மற்றும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் சவால் களுக்கு மத்தியில் இந்தியாவின் சுத்தமான எரிசக்தி விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த உள்நாட்டு மதிப்பு கூட் டலை அதிகரிப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்திய காற்றாலை விசையாழி உற் பத்தியாளர்கள் சங்கத்தின் (IWTMA) தலைவர் கிரிஷ் தந்தி, இந்த இலக்கை நோக்கி முன்னேறுவதில் துறை முழுமையாக அர்ப் பணிப்புடன் செயல்படும் எனவும் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
‘விண்டர்ஜி இந்தியா 2025’ நிகழ்ச்சி 2025 அக்டோபர் 29 முதல் 31 வரை சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், ஜெர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம் பாட்டுத் துறையின் மத்திய அமைச்சரின் நாடாளுமன்ற மாநிலச் செயலாளர் ஜோஹன் சாத்தாஃப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முந்தைய பதிப்புகளின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற விண்டர்ஜி இந்தியா 2025 இன் 7வது பதிப்பில், 20க்கும் மேற்பட்ட நாடுக ளிலிருந்து 350 நிறுவனங் கள் கண்காட்சியில் பங் கேற்றதுடன், 15,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர் கள் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி கூறுகையில், “நாட்டின், நிறுவப்பட்ட மொத்த மின் திறன் 257 ஜிகாவாட்டில் (GW), காற்றாலை ஆற் றல் சுமார் ஐந்தில் ஒரு பங்கை வகிக்கிறது. இந்தியா, 2030க்குள் உல களாவிய காற்றாலை
விநியோகச் சங்கிலியின் 10% பங்கையும், 2040க்குள் 20% பங்கையும் பெற்றிடும் திறன் கொண்டுள்ளது,” என்றார்.
இந்திய காற்றாலை விசையாழி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கிரிஷ் தந்தி கூறுகை யில், “காற்றாலை ஆற்றல் துறையில் ஆத்மநிர்பார்த் தாவை வலுப்படுத்தும் MNRE-யின் நோக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
தற்போது சுமார் 64% உள நாட்டு கூறுகள் மற்றும் 2,500-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) பங்களிப்புடன், இந்தியா உலகின் மிகவும் மீள்தன்மை கொண்ட திறனும், போட்டித் திறனும் கொண்ட காற்றாலை உற்பத்தி சூழலை உருவாக் கியுள்ளது,” என்று அவர் கூறினார்.



