fbpx
Homeபிற செய்திகள்உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு கொங்குநாடு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு கொங்குநாடு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு கோவை கொங்குநாடு மருத் துவமனையின் சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் நேற்று (ஞாயிறு) காலை 5:30 மணி அளவில் கோவை சரவணம்பட்டி குலோபஸ் சென்டரில் துவங்கியது.
இதில் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாரத்தானை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கொங்கு நாடு மருத்துவமனையின் சிறப்பு மூளை மற்றும் நரம்பு மருத்துவ நிபுணர் டாக்டர் பிரசித், மூளை மற்றும் நரம்பு மண்டல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பால செந்தில் குமரன் ஆகியேர் முன்னிலை வகித் தனர். இந்த மாரத்தானில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கு மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ஆண்கள் பிரிவில் முதல் மூன்று நபர்களுக்கும், பெண்கள் பிரிவில் முதல் மூன்று நபர்களுக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கொங்கு நாடு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள், மருத் துவர்கள், நிர்வாகிகள், செவிலியர்கள் மற்றும் அனைத்து துறையைச் சார்ந்த பணியாளர்கள், கொங்குநாடு நர்சிங் கல் லூரி மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சார்ந்த மாணவ மாணவி கள் என திரளாக பங்கேற்ற னர். கொங்குநாடு மருத்துவ மனையின் நோயாளிகளின் உறவினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img