கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தையொட்டி, உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று (1ம் தேதி) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனை வர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு இலச்சினை வடிவில் நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.தொடர்ந்து கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பேரணியாகச் சென்று எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன், பேரா.சுபாஷினி, முனைவர் நாகராஜன், முனைவர் சஹானா ஃபாத்திமா, பேரா. பிரவீன் ஆகியோர் செய்திருந்தனர்.