கோயம்புத்தூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவ டிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவ லர் டாக்டர்.மோ.ஷர்மிளா, உதவி ஆட்சியர்(பயிற்சி) மரு.பிரசாந்த், தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் வாணிலெட்சுமி ஜெகதாம்மாள், மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் சங்கீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிமேகலை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர். பொதுமக்களி டமிருந்து இலவச வீடு வேண்டி 56 மனுக்களும், வீட்டுமனைப்பட்டா வேண்டி 175 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 4 மனுக்களும், 145 இதர மனுக்கள் என மொத்தம் 380 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தர விட்டார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் க.கிரியப்பனவர் வழங்கினார்.



