முதியோர் பராமரிப்புத் துறையில் நாட்டின் முன்னோடி நிறுவனமான ஜெரி கேர் சென்னை வேளச்சேரியில் தனது புதிய மையத்தைத் திறந்துள்ளது. 2018ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் 10 ஆவது கிளை இதுவாகும். தற்போதைய புதிய கிளையில் 75 படுக்கைகள் உள்ளன. முதியோருக்குத் தேவையான வல்லுநர்களின் துணைகொண்ட மருத்துவ வசதி இம்மையத்தில் பெறலாம்.
இங்கு முதியோருக்கான டயாலிசிஸ் வசதியை நாட்டிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்தியிருக்கிறது.
பின்னிரவு நேரத்தில்கூட சிகிச்சை தேவைப்படும் குடும்பங்களின் சுமையை இது குறைக்கும். ஜெரி கேர் மருத்துவமனைக்கு அருகிலேயே இம்மையம் அமைந்திருக்கிறது. இம் மையத்தில் முதியோருக் கான உடற்பயிற்சி மையம் செயல்படுகிறது.
மேலும், ஓய்வெடுக்கவும் மற்றவர் களுடன் கலந்து பழகவும் எல்டர் குரோவ் என்ற திறந்தவெளிப் பூங்கா பகுதி அமைக்கப்படுகிறது.
இம்மையத்தை தேசிய விருதுபெற்ற நடிகை சுஹாசினி மணிரத்னம் திறந்து வைத்தார்.
அவருடன் இணைந்து பத்மஸ்ரீ பேராசிரியர் மருத்துவர். வி.எஸ். நடராஜன் இம்மையத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜெரி கேர் ஹெல்த் சர்வீசஸ் அமைப்பின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான மருத்துவர் லட்சுமிபதி ரமேஷ் பேசுகையில்,
“ஜெரி கேரின் பயணத்தில் இது ஒரு மைல்கல் ஆகும். இந்தியாவில் முதியோருக்கான மருத்துவத் தேவைகள் அதிகரித் துவரும் நேரம் இது. இச்சூழலில் அவர்களுக்கு சிறப்பான சேவையளிப்பது என்ற எமது குறிக்கோளின் பிரதிபலிப்புதான் இந்த அதிநவீன மையத்தின் திறப்பு விழா” என்றார்.
இம்மையத்தைத் தொடங்கி வைத்த தலைமை விருந்தினர் சுஹாசினி மணிரத்னம், “முதியோர் பராமரிப்பு என்பது என் இதயத்துக்கு நெருக்கமான விஷயம். ஜெரி கேர் கண்ணியம், வசதி, தரமான வாழ்க்கையை அளிக்கிறது. அதற்குத் தகுதியானவர்கள் மூத்தோர் என்பேன்” என்றார்.
கௌரவ விருந்தினரான பத்மஸ்ரீ வி.எஸ். நடராஜன், “வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை பெருகிவரும் இந்நிலையில் முதியோர் பராமரிப்பு என்பது காலத் தின் கட்டாயம் ஆகும்“ என்றார்.



