கோவை தெற்கு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பின் சார்பில் ‘விருட்சம்‘ எனும் அரசு பள்ளிகளில் குறுங் காடுகள் வளர்க்கும் திட்டம் துவக்க விழா பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இதில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பின ரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனி வாசன் சிறப்ப விருந்தினராக கலந்து கொண்டார்.
இத்திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்க ளுக்கு பேட்டி அளிக்கையில் அவர் பேசியதாவது,
பாஜக உறுப்பினர் சேர்க்கை நாடு முழுவதும் சிறப்பாக நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நடைபெறும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நாளை கலந்து கொள்வார்’ இவ் வாறு பேசினார்.
விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன்,
மது ஒழிப்பிற்காக பாஜக சார்பில் தமிழகத்தில் பல மாநாடுகளையும் போராட் டங்களையும் நடத்தியுள்ளோம். திருமாவிற்கு கூட்டணியில் என்ன பிரச்சனை என தெரிய வில்லை. பட்டியலினம் சார்த பிரச்சனைகள், பட்டியலின மாணவர்கள் மீதான தாக்குதல் என பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில். மது ஒழிப்பு மாநாட்டுக்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து விசிக புதிய அரசியல் சக்தி என் பதை நிரூபிக்கவோ அல்லது கூட்டணியில் உள்ள திமுகவிற்கு ஏதோ ஒரு செய்தியை சொல்வதாக தான் இதை பார்க்கிறோம். தமிழகத்தில் பூரண மதுவிலக்குக்காக அதிக வேலை செய்வது பாஜக தான் என கூறினார். முதலமைச்சரின் வெளி நாட்டு பயணத்தால் தமிழகத் திற்கு பயன் இருந்தால் வரவேற் கிறோம். கொங்கு மண்டல வளர்ச்சிக்கு அமைச்சர் நிர் மலா சீதாராமன் அவர்கள் பல்வேறு ஆட்சிக்காலத்திலும் உதவி செய்து வருகிறார். புதிய திட்டங்களை கோவைக்கு அவர் தந்துள்ளார். குறிப்பாக அவர் ராணுவ அமைச்சராக இருந்தபோது கோவையில் ராணுவ தளவாட உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் திட் டத்தை அமல்படுத்தினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. பெண்களின் மீதும் முதிய வர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. குறிப்பாக கல்லூரிகளில் மாணவிகள் மீது பாலியல் சீண்டல் நடைபெறுவதாக தொடர்ச்சியாக புகார் வருகிறது. தங்களது அடை யாளங்களை வெளியே தெரியாமல் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மகாவிஷ்ணு விவகாரத்தில் தமிழக அரசு இரண்டு விதமான நடவடிக்கையை எடுத்து வருகிறது. சிறுபான்மை என்றால் ஒரு நிலையை எடுக்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு முதல மைச்சர் வாழ்த்து கூறவில்லை. வாக்கு வங்கிக்காக மட்டும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு வாழ்த்து கூறுகிறார்.
ராகுல் காந்தி அமெரிக்கா மட்டுமல்ல இந்தியாவிலும் சம் பந்தமில்லாத விஷயங்களை பேசி வருகிறார் என தெரிவித்தார்.



