fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: 194 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், 126 நபர்களுக்கு நலஉதவிகள்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: 194 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், 126 நபர்களுக்கு நலஉதவிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் 17 வட்டார அளவிலான முகாம்கள் நடத்தப்பட்டதன் வாயிலாக பயனடைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக மக்களின் அனைத்து விதமான தேவைகளையும், நலனையும் கருத்தில்கொண்டு பல்வேறு அரசுநலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறார்.
அதனடிப்படையில், மாற்றுத்திறனாளிகளின் தாய், தந்தையாகவும், பாதுகாவலராகவும் இருந்துவரும் முதலமைச்சர், மாற்றுத்திறனாளிகளின் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்திட பல்வேறு புதுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக துறையை உருவாக்கியுள்ள நாட்டின் ஒரேமாநிலம் தமிழ்நாடாகும்.

ராணிப்பேட்டை மாவட் டத்தில் முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படியும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் படியும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை களையவும், நலத்திட்ட உதவிகளையும், உதவி உபகரணங்களையும் எளிதில் பெற்றிடவும், மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவ லர்கள் அரசின் நலதிட்டங்களை எவ்வித சிரமம் இன்றி எளிதில் பெறவும் வழிவகைசெய்திட 17 வட்டார அளவிலான சிறப்புமுகாம்கள் நடத்தப்பட்டது.
இம்முகாம்களில் 3464 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இவர்களில் 1765 மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாளஅட்டைகள், 1124மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம்வாய்ந்த அடையாள அட்டைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 194 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், காதொலிக் கருவி, சக்கர நாற்காலி, ஊன்றுகோல், முழங்கை தாங்கி, மூன்று சக்கர நாற்காலி, கல்வி உதவித் தொகை என 126 நபர்களுக்கு ரூ.9.30 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடைந்த மாற்றுத்திறனாளிகள் கூறியிருப்பதாவது:
என் பெயர் ராதாகிருஷ்ணன், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றேன். சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம், ஒழுகூர் ஊராட்சியில் வசிக்கின்றோம். என்னுடைய மகனான பிரேம்நாத், 3 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது, உடல்நிலை பாதிக்கப்பட்டு இரண்டு கால்கள் நடக்க முடியாமல் போனது. தற்பொழுது ஒழுகூர் அரசு தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகின்றான். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சக்கர நாற்காலி வேண்டி மனு கொடுத்திருந்தோம். தற்பொழுது மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் சக்கர நாற்காலி கொடுத்திருக்கின்றார்கள். இது என் மகன் பள்ளிக்கு சென்றுவர மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த உதவி புரிந்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

என் பெயர் குணா, பாலகிருஷ்ண £புரம், கும்பினிப்பேட்டை அஞ்சல், அரக்கோணம் வட்டத்தில் வசிக்கின்றேன். என்னுடைய இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் நடக்க முடியாது. அதனால் மற்றவர்களின் தயவின்றி எங்கேயும் வெளியில் சென்று வரவும் முடியாது. எங்கள் பகுதியில் நடைபெற்ற வட்டார அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான முகாமில் எனக்கு ரூ.12,500 மதிப்பீட்டிலான மூன்று சக்கர சைக்கிள் வழங்கியுள்ளார்கள். இது எனக்கு வெளியில் சென்றுவர மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த நலத்திட்ட உதவி வழங்கியமைக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தொகுப்பு:
செ.அசோக்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
ராணிப்பேட்டை மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img