fbpx
Homeபிற செய்திகள்வரலாற்று சாதனை படைக்க தயாராகும் விராட் கோலி!

வரலாற்று சாதனை படைக்க தயாராகும் விராட் கோலி!

இன்னும் 58 ரன்கள் அடித்து கிரிக்கெட் உலகில் பிரம்மாண்ட மைல்கல் சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார், விராட் கோலி.

தற்போது விராட் கோலி டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 என ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 26,942 ரன்கள் சேர்த்துள்ளார். இன்னும் 58 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் அவர் 27,000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டுவார். இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே அந்த மைல் கல்லை எட்டி உள்ளனர்.

ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 34,357 ரன்கள் சேர்த்துள்ளார். குமார் சங்ககாரா இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் 28,016 ரன்கள் சேர்த்துள்ளார். ரிக்கி பாண்டிங் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அவர் 27,483 ரன்கள் சேர்த்துள்ளார்.

அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை எட்டிய நான்காவது வீரர் என்ற சரித்திரத்தை விராட் கோலி படைக்கப்போகிறார்.

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்க உள்ள நிலையில் முதல் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிகழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த வகையில் விராட் கோலி அந்த சாதனையை சென்னையிலேயே நிகழ்த்துவார் என்பதில் சந்தேகமில்லை.

விராட் கோலி நிகழ்த்தவிருக்கும் சாதனையை மகிழ்ச்சியுடன் கொண்டாட கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

கோலிக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img