fbpx
Homeபிற செய்திகள்விழுப்புரம் மாவட்ட நியாயவிலைக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி

விழுப்புரம் மாவட்ட நியாயவிலைக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி

டிஜிட்டல் இந்தியா திட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில், முதல் முறையாக நியாயவிலைக் கடைகளில் ‘கியூ ஆர் கோடு’ மூலம் பணம் செலுத்தும் முறையை மாவட்ட ஆட்சியர் சி. பழனி துவக்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டத் தில் மொத்தம் 1254 நியாய விலை கடைகள் உள்ளன. இதனை டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ‘கியூ ஆர் கோடு’ மூலம் பணம் செலுத்தும் நடைமுறை மாவட்டம் முழுவதும் முதற்கட்டமாக துவக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 128 கடைகளுக்கு ‘QR’ கோடு மற்றும் ஸ்பீக்கர் மெஷின் வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் சி. பழனி துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு க்யூ ஆர் கோடு முறையில் பணம் செலுத்தி பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார்.

ஆட்சியர் கூறுகையில், மாவட்டம் முழுவதும் உள்ள 1254 கடைகளில் இந்த திட்டம் அமல் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.
முதல் கட்டமாக 128 கடைகளில் இன்று அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கான பயன்பாடு வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். மக்கள் கியூ ஆர் கோடு முறையில் நேரடியாக பணத்தை செலுத்தி, பில்லை சரி பார்த்து வாங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் கால விரயம் தவிர்க்கப்படும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img