fbpx
Homeபிற செய்திகள்விபத்தில்லா மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க மாணவர்களுக்கு அமைச்சர் கா.ராமச்சந்திரன் அழைப்பு

விபத்தில்லா மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க மாணவர்களுக்கு அமைச்சர் கா.ராமச்சந்திரன் அழைப்பு

நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலையத்தில், முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நெடுஞ்சாலை துறையின் சார்பில் நடந்த சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் மு.அருணா முன்னிலை வகித் £ர்.
பேரணியில், உதகை அரசு மேல்நிலைப்பள்ளி, தூய இருதய ஆண்டவர் மேல் நிலைப்பள்ளி, புனித சூசை யப்பர் மேல்நிலைப்பள்ளி, அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் என மொத்தம் 600 பேர் பங்கேற்றனர்.

உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு மணிகூண்டு, சேரிங்கிராஸ் வழியாக சென்று பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் பேரணி நிறைவடைந்தது.
சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவியர்கள் பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர்.

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தினை மாணவ, மாணவிகளுடன் சுற்றுலாத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்ததாவது:
எண்ணற்ற மக்களை இணைக்கும் பாலமாக இருப்பவை சாலைகள். சாலைகளில் விபத்துக்களின்றி விழிப்புணர்வுடன் பயணம் செய்வது அவசியம்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விபத்துகள் கவனக்குறைவு காரணமாகவோ அல்லது சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலோ ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 18 முதல் பிப்ரவரி 17 வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, விபத்துகளை வெகுவாக குறைத்திடவும், சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுத்திடவும், சாலை போக்குவரத்து விதி முறைகளை கடைபிடித்திடவும், சாலைப் பாதுகாப்பு போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி, பொதுமக்களின் நலன் பாதுகாத்திட சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்களும், சாலை பாதுகாப்பு தொடர்பான பல விதமான திட்டங்களை மிக சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது.

விபத்துகளை குறைத்திட சாலை பாதுகாப்பு செய்தல் மற்றும் கரும்புள்ளி பகுதியினை உபகரணங்கள் பொருத்துதல், சந்திப்பு மேம்பாடு படிப்படியாக குறைத்து, முற்றிலுமாக அகற்றி மிதமான போக்குவரத்திற்கு ஏற்றவாறு தரமான சாலையினை அமைத்திட, தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக விபத்துகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

விபத்து குறித்தான பெரும்பாலான ஆய்வுகளில் சாலை விதிகளை பின்பற்றாதது தான் முக்கிய காரணமாக உள்ளது. இளைஞர்கள் வாகனம் ஓட்டும்போது சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து, விபத்தில்லா மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட உறுதியேற்போம்.

முதல்வர், பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளித்து, பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். எனவே பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி கற்க அதிக கவனம் செலுத்த வேண்டும். நன்றாக படித்தால்தான் எதிர்காலத்தில் ஒரு சிறந்த நிலையை அடைய முடியும் என்ற எண்ணத்துடன் கல்வி கற்க வேண்டும்.

கல்வி மட்டும்தான் ஒரு மனிதனை உயர்ந்த நிலை அடைவதற்கு உறுதுணையாக இருக்கும். ஆகவே மாணவச் செல்வங்கள் எதிர்காலத்தை மனதில் நிறுத்தி, தங்களது இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கல்விகற்க அதிக கவனம் செலுத்தி, அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும்.

அதேபோல் விபத்துகளில் சிக்கிய நபர்களை உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளும் வகையில், இன்னுயிர் காப்போம் 48 மணி நேரம் திட்டத்தின்கீழ், மருத்துவ சிகிச்சைக்கான செலவுத்தொகையை தமிழ்நாடு அரசே ஏற்கும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின்கீழ், மருத்துவ சிகிச்சைக்கான உதவித்தொகைகள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடிமாநிலமாக அனைத்துத்துறைகளிலும் திகழ்ந்து வருகிறது என்றா சுற்றுலாத்துறை அமைச்சர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி.பிரபாகர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்திராஜன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் குழந்தைராஜ், உதகை வருவாய் கோட்டாட்சியர் (பொ) திரு.பூஷணகுமார், உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், உதகை நகர்மன்றத் தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார், உதவி கோட்டப் பொறியாளர் ஜெயபிரகாஷ், உதவி பொறியாளர்கள் ஸ்டாலின் (உதகை), பாலசந்தர் (குன்னூர்), உதகை வட்டாட்சியர் சரவணகுமார், நகர்நல அலுவலர் (உதகை) மரு.ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img