உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் மாரத்தான் ஓட்டம் நடந்தது. உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு
இதையொட்டி பொது மக்களிடையே ஆட் கொல்லி நோயான எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் மாரத்தான் ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நறுவீ மருத்துவமனை முகப்பிலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், நறுவீ மருத்துவமனைத் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குனர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவை இயக்குனர் டாக்டர் திலீப் மத்தாய், தலைமை செயல் அலுவலர் மணிமாறன், தலைமை நிதி அலுவலர் வெங்கட்ரங்கம், பொது மேலாளர் நித்தின் சம்பத், மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
வேலூர் நகரின் முக்கிய சாலைகள் வழியாக மாரத்தான் ஓட்டம் சென்று மீண்டும் நறுவீ மருத்துவமனை வளாகத்தை அடைந்தது. உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நறுவீ மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.