கென்யா நாட்டின் கிசுமு மாகாண நோயாளிகளுக்கு வேலூர் நறுவீ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட் டுள்ளது.
ஒப்பந்தத்தில் கிசுமு மாகாண கவர்னர் அன்யாங் நியோங்கோ, வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் ஆகியோர் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.
கிளினிக்
செய்தியாளர்கள் கூட்டத்தில் கிசுமு மாகாண கவர்னர் அன்யாங் நியோங்கோ, வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் ஆகியோர் கிசுமு மாகாணத்தில் இருந்து இதயம், நரம்பியல், காது மூக்கு தொண்டை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நறுவீ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்கப்படும். கிசுமு நகரில் நறுவீ மருத்துவமனையின் கிளினிக் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
தமாக நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் கூறுகையில், மருத்துவ சேவை சம்மந்தமாக நறுவீ மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் பற்றியும், மருத்துவமனையில் உள்ள் மருத்துவ சாதனங்கள், நோயா ளிகளுக்கான மருத்துவ சேவை, கட்டமைப்பு வசதி உள்ளிட்டவற்றை பார் வையிட்டனர் என்றார்.
கிசுமு மாகாண கவர்னர் அன்யாங் நியோங்கோ கூறுகையில், கிசுமு நகரில் மிகப் பெரிய ஜார்மோகி ஒகிங்கா ஒடிங்கா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதி உள்ளது. முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
நறுவீ மருத்துவமனை அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றிற்கு சிறந்த மருத்து வமனையாக உள்ளது என்றார். கிசுமு மாகாண கவர்னரின் மனைவி டாரத்தி நியோங்கோ, கிசுமு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் கிரிகோரி காண்டா, கிசுமு மாகாண ஜார்மோகி ஒகிங்கா ஒடிங்கா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் ஜார்ஜ் ரே, கவர்னரின் தொழில் நுட்ப ஆலோசகர் எட்டி இல்லா, நறுவீ மருத்துவமனை துணை தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நிதின் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.



