வேலூர் மாவட்டத்தில் 2023-24ம் ஆண்டில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரமய மாக்கல் திட்டத்தின் கீழ் 133 விவசாயிகளுக்கு ரூ.3.63 கோடி மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் ரூ.1.40 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நிலவும் வேளாண்மை தொழிலாளர் பற்றாக்குறையை போக்க வும், குறித்த நேரத்தில் குறைந்த செலவில் வேளாண் பணிகளை தொடங்கவும், பயிர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், அறு வடை பணிகளை மேற்கொள்ளவும், தமிழ்நாடு அரசு வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது,
இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நவீன வேளாண் இயந்திரங்களான டிராக்டர், பவர் டில்லர், நாற்று நடும் இயந்திரம், களையெடுக்கும் இயந்திரம், அறுவடை இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்களும், கல்டிவேட்டர், ரோட்டவேட்டர், வைக்கோல் கட்டும் இயந்திரம் உள்ளிட்ட இணைப்பு கருவிகளும் மானிய விலையில் வழங்கப் படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் 2023-&24- ஆண்டில், 2022-23 ஆண்டு இரண்டாம் தவணை நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.2.06 கோடி மதிப்பிலான 60 வேளாண் இயந்திரங்கள் ரூ.84.55 லட்சம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
2023-24- ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் முதல்வர் அறிவுரையின்படி, தமிழ்ந £டு முழுவதும் 5000 பவர் டில்லர் / பவர் வீடர் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.57 கோடி மதிப்பிலான 62 பவர் டில்லர் மற்றும் 11 களையெடுக்கும் கருவிகள் ரூ.55.81 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் இதுவரை வேலூர் மாவட்டதில் விவசாயிகளுக்கு ரூ.3.63 கோடி மதிப்பிலான 133 வேளாண் இயந்திரங்கள் ரூ.1.40 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்.



