fbpx
Homeபிற செய்திகள்வரமகாலட்சுமி சில்க்ஸ் விறப்னையகம் சென்னை பூந்தமல்லியில் துவக்கம்

வரமகாலட்சுமி சில்க்ஸ் விறப்னையகம் சென்னை பூந்தமல்லியில் துவக்கம்

பாரம்பரியமிக்க, நவீன, ஆயத்த ஆடை சில்லறை விற்பனையகமான சாய் சில்க்ஸ் கலா மந்திர் லிமிடெட் நிறு வனம், காஞ்சிபுரம் வரமகாலட் சுமி சில்க்ஸ் 57-வது விற்பனை யகத்தை சென்னையில் உள்ள பூந்தமல்லியில் துவக்கியது.

தமிழ்நாட்டில் 7-வது விற்பனையகமாகவும்,சென் னையில் 4-வது விற்பனைய கமாகவும் துவக்கப் பட்டுள்ள இந்த கடையை, பிரபல நடிகை குஷ்பு சுந்தர் துவக்கி வைத்தார்.

விற்பனையாகத்தில் உயர்தர வடிவமைப்புகள் கொண்ட பனாரசி, காஞ்சிபுரம், பட்டோலா, ஐகாட், ஆர்கன்சா மற்றும் குப்பம் வகை சேலைகள் இடம் பெற்றுள்ளன.

சாய் சில்க்ஸ் கலாமந்திர் லிமிடெட் முதன்மை நிர்வாக இயக்குநர் பிர சாத், சாலவாடி கூறு கையில், தமிழ்நாடு தவிர சென்னையில் எங்களது வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தவும், பாரம் பரிய, நவீன ஆடைகளை விற்பனையை சந்தையின் விரிவாகத்தில் பங்கேற்கவும் இந்த விற்பனையகம் உதவும்.

எங்களது வளர்ச்சி திட்டத்திற்கு உதவும் வகை யில், தெலுங்கானா வில் துவங்கியது போன்றே சென்னையிலும் அடி யெடுத்து வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் எங்களது விற்ப னையகங்களை துவக்குவதோடு, மாபெரும் இருப்பு வைக்கும் இடங்களையும் விரிவாக்கம் செய்ய உள்ளோம், என்றார்.

பாரம்பரியமிக்க கலாச்சார உடைகளை மக்கள் விரும்பி வாங்கும் தசரா, தீபாவளி, கிறிஸ் துமஸ், சங்கராந்தி போன்ற திருவிழா காலத்தில் விற்பனையாகத்தை துவக்க இதுவே சரியான, சிறப்பான தருணமாக இருக்கும் என்று கருதினோம் என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img