கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் தொழில் நுட்பக் கல்லூரியில் 16ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம் , இணைச் செயலாளர் அருண் கார்த்திகேயன், இணைத் தலைவர் முனைவர் மைதிலி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக முனைவர் காயத்ரி (மனித வள ஹெச்.ஆர் ஆப்ரேஷன் ஸ்பெஷலிஸ்ட், எக்ஸாவேர் டெக்னாலஜிஸ், பெங்களூர்) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இன்றைய மாணவர்கள் வளாகத் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது? திறன்களை எப்படி வளர்த்துக் கொள்வது? என மாணவர்களுக்கு சிறப்பாக விளக்கம் அளித்தார்.
மேலும் தனது உரையில பேச்சுத் திறமையை வளர்த்துக் கொண்டு சிறப்பாக பணியாற்றினால் மட்டுமே வெற்றி என்ற உயரத்தை அடைய முடியும் என்றார்.
மேலும் ஒவ்வொரு துறையிலும் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், 100% வருகைப்பதிவு கொடுத்த மாணவர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய ஆசி ரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விழாவிற்கு வந்த அனைவரையும் யுனைடெட் தொழில்நுட்ப கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோகிலா வரவேற்றார், முனைவர் அப்துல் ரப் முதல்வர் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். இதற் கான அனைத்து ஏற்பாடுகளையும் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூ ரியின் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.



