fbpx
Homeபிற செய்திகள்நிர்மலா மகளிர் கல்லூரி ஆண்டு நிறைவு விழா

நிர்மலா மகளிர் கல்லூரி ஆண்டு நிறைவு விழா

கோவை நிர்மலா மகளிர் கல்லூரி 2024 – 2025 ஆம் கல்வியாண்டின் நிறைவு விழா நேற்று (24ம் தேதி) காலை கல்லூரி கலை அரங்கத்தில் நடை பெற்றது. விழாவில் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தைச் சார்ந்த டாக்டர் சம்பந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு லட்சுமி செராமிக்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் கற்பகம் முத்து ராமன் கலந்து கொண்டு மேலும் விழாவினைச் சிறப்பித்தார்.

கல்லூரியின் மாண வியர் தலைவி 2024 – 2025 ஆம் கல்வியாண்டில் கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளை தொகுத்து வழங்கினார்.
மேலும் கல்லூரியின் அனைத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த செய்திகளும் தொகுத்து வழங்கப் பட்டன. பாடத்திட்டம் மட்டு மல்லாது இணைப் பாடத்திட்டத்தின் செயல் பாடுகளும் தொகுத்து வழங்கப்பட்டன. 2024 – 2025 ஆம் கல்வியாண்டில் முதன்மைப்பாடத்திலும் மொழிப்பாடத்திலும் முதல் மூன்று நிலைகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப் பட்டன.

கல்லூரியானது உதவித்தொகைகளுக்கு அனுமதி அளித்து மாணவிகளின் கல்வியை ஆதரிப்பதில் தனது பங் கினை ஆற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 223 மாணவர்கள் மானியம் மற்றும் நினைவு உதவித் தொகைகளின் வட்டித் தொகையில் இருந்து உருவாக்கப்பட்ட ரூ.232,738 நிதி உதவியைப் பெற்றனர் என்று கணக் கிடப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், தற்போதைய ஊழியர்கள் மற்றும் தாராள மனப்பான்மை கொண்ட நலம் விரும்பிகளால் வழங்கப்பட்ட இந்த உதவித் தொகைகள், அனைத்தும் அனைவரின் ஒத்து ழைப்பை நிலைநாட்டி பெண் கல்விக்கு மேலும் வலுவூட்டியிருக்கின்றன.

சிறப்பு விருந்தினர் டாக்டர் சம்பந்தன் பேசு கையில், பெண் கல்வியின் இன்றியமையாமை குறித் தும் வறுமையிலும் செம்மையாக வாழ வேண்டும் என்பது குறித் தும் மாணவரிடயே விழிப்புணர்வை ஏற்படுத் தினார்.
மேலும் கடின உழைப்பினால் மட்டுமே வாழ்க்கையின் மிகச் சிறந்த நிலையை அடைய முடியும் என்பதையும் எடுத்துரைத்தார்.

பிறர் மீது செலுத்தும் அன்பு அனைவரையும் நல்ல நிலைக்குக் கொண்டு செலுத்தும் என்பதையும் தனது அனுபவங்கள் மூலமாக மாணவிகளுக்கு எடுத்துக்கூறினார்.
கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ், மற்றும் முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா இருவரும் சிறப்பு விருந்தினர்களுடன் இணைந்து மாணவிகளுக் குப் பரிசுகளை வழங்கினர்.
மேலும் அனைத்து நன் கொடையாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img