யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி வீடு மற்றும் கார் கடன் மேளா கண்காட்சியிளை நாளை, நாளை மறுநாள் என 2 தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை கோவை, அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் நடத்துகிறது. இக்கண்காட்சியினை பார்வையிடுவதற்கான அனுமதி இலவசம்.
இந்த மேளாவில் வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் வங்கி கடன்களை பொதுமக்கள் சுலபமாக பெறலாம். இக்கண்காட்சி 12-வது வருடமாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த வட்டி விகிதத்தில் லோன் வழங்குகிறது. மேலும் இங்கு உடனடி கடன் ஒப்புதல் பெற முடியும்.
உங்களது பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் ரூ.10 லட்சம் முதல் வீட்டுமனைகள் இங்கு வாங்கலாம். இக்கண்காட்சியில் பல்வேறு முன்னணி பில்டர்கள் மற்றும் கார் டீலர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இக்கண்காட்சியில் 23-ம் தேதி மாலை 4 மணிக்கு 8 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு ஓவியப்போட்டி நடைபெறுகிறது.