சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, முத்துபட்டினம், முத்துராமன் செட்டியார் தெருவில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது. இதில் காரைக்குடி மற்றும் புதுவயல் வித்யா கிரி குரூப் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலாளர் டாக்டர் டி.சுவாமிநாதன் குத்துவிளக்கேற்றினார். அருகில் வங்கியின் கோவை மண்டல மேலாளர் பி.ராமசேகரா, கிளை மேலாளர் எஸ்.சதீஷ் குமார் உள்ளிட்டோர் படத்தில் உள்ளனர்.