வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் “வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025” விழாவில் நிறைவு நாளான வெள்ளியன்று வருங்கால இளைய தலைமுறையின ரான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பார்வை யிட்டு, வேளாண்மை குறித்த தங்களது சந்தேகங்களுக்கு வேளாண் வல்லுநர்களிடம் விளக்கம் பெற்று பயன்பெற்றனர்.
முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் கடந்த 11ம் தேதி ஈரோடு மாவட்டம், பெருந்துறை- விஜயமங்கலம் பகுதியில், வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025” கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டு. கருத்தரங்கத்தினைத் தொடங்கி வைத்து, இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. மேலும், விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று 3 -வது நாளாக நீட்டிப்பு செய்யப்பட்டு கண்காட்சி நடைபெற்றது.
அரசின் அனைத்துத் திட்டங்கள் மற்றும் பல் வேறு வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தற்போதைய அனைத்து விவரங்களை உழவர்கள், மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப் படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள் இயற்கை நல ஆர்வலர்கள் ஆகியோர் ஒரேஇடத்தில் அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டி ருந்த வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025 -யை மாநிலத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் கடந்த 2 நாட்களாக சுமார் 65,000க்கும் மேற்பட்டவர் கள் வருகை தந்து பார்வையிட்டார்கள்.
நேற்றைய தினம் சுமார் 25,000-க்கும் மேற் பட்டவர்கள் பார்வை யிட்டு பயன்பெற்றனர். மேலும், கடந்த 3 நாட்களாக 90,000 நபர் கள் பார்வையிட்டு பயனடைந் தனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பார்வை யிட்டு, வேளாண்மை குறித்த தங்களது சந்தேகங்க ளுக்கு வேளாண் வல்லுநர்களிடம் விளக்கம் பெற்று குறிப்புகள் எடுத்து பயன்பெற்றனர்.