வ.உ.சிதம்பரனார் 152வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் உள்ளனர்.