fbpx
Homeபிற செய்திகள்கருணாநிதி நூற்றாண்டு விழாவில் 1200 மரக்கன்றுகள் நடப்பட்டன- கனிமொழி எம்பி தொடங்கிவைத்தார்

கருணாநிதி நூற்றாண்டு விழாவில் 1200 மரக்கன்றுகள் நடப்பட்டன- கனிமொழி எம்பி தொடங்கிவைத்தார்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தூத்துக்குடி 3ஆம் மைல் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி மரக்கன்றுகள் நடும் விழாவைத் தொடங்கி வைத்தார். மொத்தம் 1,200 மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் இசக்கி ராஜா, கீதாமுருகேசன், அந்தோனி மார்சிலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img