fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்துநிலையம் மார்ச் மாதம் திறப்பு- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்துநிலையம் மார்ச் மாதம் திறப்பு- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய சாலைகள், மின் விளக்குகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், வாகன காப்பகம், உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் பல கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாநகர பகுதியில் இருந்த பழைய பேருந்து நிலையம் முழுமை யாக அகற்றப்பட்டு புதிய பொலிவுடன் அனைத்து வசதிகளுடன் நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய அடுக்குமாடி பேருந்து நிலையமாக கட் டப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு ஏற்கனவே ஒருமுறை ஆய்வு மேற் கொண்டுள்ளார். இரண் டாவது முறையாக மீண்டும் கட்டுமான பணி களை அமைச்சர்கள் நேரு, கீதாஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், எம்எல்ஏ சண் முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, நகராட்சி&-மாநகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா ஆகியோருடன் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற் கொண்டார்.

பின்னர் அமைச்சர் நேரு அளித்த பேட்டி: தூத்துக்குடி புதுப்பிக்கப் பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் சிதம் பரநகர் வணிக வளாகம் ஆகிய இரண்டும் பிப்ரவரி மாதத்திற்குள் பணிகள் முடிவு பெற்றுவிடும் என்று ஒப்பந்ததாரர்கள் தெரி வித்துள்ளனர். அதன் அடிப்படையில் மார்ச் மாதத்தில் இரண்டும் திறக்கப்படும்.

ஸ்மார்ட் திட்டத்தில் கடந்த ஆட்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வந்த புகாரையடுத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு 10 மாநகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.

இந்த பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் அனைத்தும் முறையாக ஏலம் விடப் பட்டு வழங்கப்படும். அதே போல் பாதாள சாக்கடை திட்டமும், மார்ச் மாதத் திற்குள் முழுமையாக நிறைவடையும். வாகன காப்பகம் டெண்டர் மூலம் வழங்கப்படும்.

அது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டாலும், மாநகராட்சி ஆணையரின் நேரடி பார்வையில் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பொதுக் குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, மாவட்ட அணி அமைப் பாளர்கள் மதியழகன், கஸ்தூரிதங்கம், துணை அமைப்பாளர்கள் வக் கீல்கள் சீனிவாசன், சுபேந்திரன், அந்தோணி கண்ணன், ராமர், கவிதாதேவி, மாநகர அணி அமைப்பாளர்கள் அருண் குமார், பிரபு, சக்திவேல், துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், டைகர்வினோத், அருண் சுந்தர், ஆர்தர்மச்சாது, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார், ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வகுமார், சேர்மபாண்டியன், கவுன் சிலர்கள் சரவணக்குமார், பொன்னப்பன், ஜான், வைதேகி, நாகேஸ்வரி, ஜான்சிராணி, விஜயகுமார், ராஜதுரை, ஜெயசீலி, தெய்வேந்திரன், சோம சுந்தரி, முத்துவேல், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பாலு, சுப்பையா, வன்னியராஜ், சதீஷ்குமார், செல்வராஜ், ரவிந்திரன், சுரேஷ், கீதா செல்வமாரியப்பன், முத்துராஜா, முக்கையா, பொன்ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், நவநீதன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, மகளிர் அணி நிர்வாகிகள் ரேவதி, சத்யா, கன்னிமரியாள், சந்தனமாரி மற்றும் கருணா, அல்பட் மணி பிரபாகர், ஜோஸ்பர், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன், மாந கராட்சி பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் சர வணன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் தனசிங், சேகர், சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருச் செந்தூரில் நடைபெறும் பல்வேறு பணிகளை அமைச்சர் நேரு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img