தேசிய அளவிலான கராத்தே போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் எஸ்.கே. பரத் விக்ரமன் தங்கப்பதக்கம் வென்றார்.
இந்திய கராத்தே பூடோகான் சம்மேளனம் சார்பில், ஈகிள் கராத்தே பூடோகான் கிளப் மற்றும் தமிழ்நாடு கராத்தே பூடோ கான் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய, ‘20-வது கே.பி.ஐ. தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி 2022-&-23’ கோவை சிங் காநல்லூரில் உள்ள பெர்க்ஸ் கலையரங்கில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, டெல்லி, மேற்கு வங்கா ளம், கர்நாடகா, தெலுங் கானா, ஆந்திரா, ஒடிசா, மராட்டியம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 800 கராத்தே வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்ட, கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை முதலாமாண்டு மாணவர் எஸ்.கே. பரத் விக்ரமன் 5 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார்.
குமுத்தே போட்டி
இதன்படி 20 வயதுக்கு உட்பட்டோருக்கான குழு குமுத்தே போட்டியில் தங்கப் பதக்கமும், கட்டா, வெப்பன் கட்டா மற்றும் குமுத்தே ஆகிய 3 பிரிவுகளில் தலா 1 வெள்ளிப் பதக்கமும், குழு கட்டா பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
தேசிய கராத்தே போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவர் எஸ்.கே. பரத் விக்ரமனை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் திரு. டி.லட்சுமி நாராயண சுவாமி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், உடற்கல்வி இயக்குநர் முனைவர் கே.வடிவேலு, கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் ஜி.மரியா பிரசில்லா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.



