fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் 3 புதிய மின் மாற்றிகளை அமைச்சர் கீதா ஜீவன் இயக்கிவைத்தார்

தூத்துக்குடியில் 3 புதிய மின் மாற்றிகளை அமைச்சர் கீதா ஜீவன் இயக்கிவைத்தார்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜபாண்டி நகர் சிதம்பரம் நகர் பத்தினாதபுரம் பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் பிரச்சனைகள் நிலவிவந்ததையடுத்து, சமூக நலன் மற்றும் மகளிர் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், சம்பத்தப்பட்ட துறை அலுவலர்களிடம் குறைந்த மின்னழுத்த பிரச்சணைகளை விரைந்து சரி செய்திட அறிவுறுத்தினார்.

இதனையடுத்து தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், செயற்பொறியாளர் நகர் ராம்குமார் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி நகர் தெற்கு உப கோட்டத்தில், ஊரகம் மேற்கு பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட ராஜபாண்டி நகர், சிதம்பர நகர் பத்தினாதபுரம் ஆகிய பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் சரி செய்யும் பொருட்டு சுமார் 232 மின்நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 22.68 லட்சம் மதிப்பீட்டில் 3 எண்ணம் 63KVA/22KV புதிய மின் மாற்றிகள் சமூக நலன் மற்றும் மகளிர் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் இயக்கிவைத்ததையடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இதனால் ராஜபாண்டி நகர், சிதம்பர நகர் பத்தினாதபுரம் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர்கள் பயன்பெறுவார்கள்.
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, உதவி செயற்பொறியாளர் நகர் தெற்கு உமையொருபாகம், உதவி பொறியாளர்கள் பெருமாள், இரமேஷ் மற்றும் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாமன்ற உறுப்பினர்கள் வைதேதி, சரவணன், வட்ட செயலாளர் மூக்கையா, மின் ஆக்கமுகவர்கள், மின்பாதை ஆய்வாளர்கள், கம்பியாளர்கள், களப்ணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img