தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் டூவிபுரத்தில் செயல்பட்டு வருகிறது. அதில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இ சேவை மையத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திறந்து வைத்தார்.
இ-சேவை
இந்த சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சேவைகள் வழங்கப்படும். மற்றவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் மட்டும் செலுத்தி இ-சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்ட லத்தலைவர் கலைச்செல்வி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மேகநாதன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மாநகர அணி அமைப்பாளர்கள் டாக்டர் அருண் குமார், ஜெயக்கனி, துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செந்தில், அருண்சுந்தர், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், முத்துவேல், வைதேகி, ராஜதுரை, பட்சிராஜ், கந்தசாமி, சுயம்பு, வட்டச்செயலாளர்கள் செந்தில்குமார், பாலு, வன்னிராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, மற்றும் அற்புதராஜ், கருணா, மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.



