கிருஷ்ணகிரியில் பொதுமக்களின் வாழ்க்கை தரம் குறித்து கணக் கெடுக்கும் பணியை, மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி நகராட்சி க்கு உட்பட்ட வீரப்பநகரில் நேற்று மாவட்ட புள்ளி யியல் துறை சார்பில், பொதுமக்களின் வாழ்க்கை தரம் குறித்து தொடர் ஆய்வு நடந்தது.
இப்பணி களை புள்ளியியல் ஆய் வாளர்கள் கிருத்திகா, பார்த்திபன் ஆகியோர் மேற்கொண்டனர். இப் பணிகளை மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குநர் குப்புசாமி ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் கூறும்போது, தமிழகத்தில் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக மாற்றத்தின் கீழ் மக்களின் வாழ்க்கை தரம், வறுமை ஒழிப்பு, திருமணம், குழந்தை பிறப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, பெண்களின் வேலைவாய்ப்பு, நகரமயமாக்கல், சுகாதாரம், மருத்துவம், வீட்டு வசதி மற்றும் பிற அம்சங்களில் நிகழும் மாற்றங்களை கண்டறிந்து, அரசின் திட்டமிடலுக்கு துணை செய்யும் அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆய்வு தமிழகத் தில் புள்ளியியல் துறை மற்றும் எம்ஐடிஎஸ் எனப் படும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
வீடுகளில் ஆய்வு
தமிழகத்தில் நகர்புறம், கிராமபுறங்களில் 20,539 வீடுகள் மக்களின் பொருளாதார மற்றும் சமூக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு 12,632 வீடுகளில் ஆய்வு முடிவடைந்துள்ளது. மீத முள்ள 7,907 வீடுகளில் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்புறத்தில் 243 வீடுகளும், கிராமபுறங்களில் 264 வீடுகள் என மொத்தம் 507 வீடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில், நகர்புறத்தில் 95, கிராமபுறத்தில் 126 வீடுகளில் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீத முள்ள வீடுகளில் மக்களின் குடும்ப சூழ்நிலை, வறுமை, வேலைவாய்ப்பு, மருத்துவ செலவு, கல்வி, உணவு செலவு மற்றும் பிற அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
தேர்வு செய்யப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த ஆய்விற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும், என்றார்.