ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதில் 238 பேர் பலியானார்கள். இதனை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சரும் மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், கலைஞர் அரங்கின் முன் மவுன அஞ்சலி செலுத்தினார்.
உடன் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் . ஆனந்தசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.