fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளிகளுக்கு நலஉதவி வழங்கிய தூத்துக்குடி மேயர்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலஉதவி வழங்கிய தூத்துக்குடி மேயர்

தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம், மாவட்ட காதுகேளா தோர் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் ஆகியவை சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

இவ்விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், கல்வி உதவித்தொகை, தையல் இயந்திரம், சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் மாநிலத் தலைவர் மருதப்பெருமாள், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், தொழிலதிபர் விவேகம் ரமேஷ், லயன்ஸ் கிளப் டேவிட் கோர்ட் ராஜா, வழக்கறிஞர்கள் முருகன், அரிராகவன், தொழிலதிபர் கிருஷ்ண மூர்த்தி, மாமன்ற உறுப்பினர் சுகாதாரத் துறை குழு தலைவர் சுரேஷ்குமார்
நாகேஸ்வரி, பகுதி செயலாளர் ரவி மற்றும் மாவட்டத்தில் உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img