கோவை கவுண்டம்பாளையத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட் டியின் கோவை மாவட்ட கிளை சார்பில் புதிய ரத்த வங்கி தொடங்கப் பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார், சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி டாக்டர் எம். ஜெயச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய ரத்த வங்கியை திறந்து வைத்தனர்.
இந்த விழாவிற்கு கோவை ரெட் கிராஸ் சொசைட்டியின் சேர் பேர்ஷன் நந்தினி ரங்கசாமி முன்னிலை வைத்தார். ரூட்ஸ் கே.ராமசாமி, மோகன் சங்கர். எஸ்.ஜே.பாலகிருஷ்ணன், அன்ன பூர்ணா குரூப் சீனிவாசன், ராமசாமி, எஸ்.வி. பால சுப்ரமணியம், சாய் கிருஷ்ணன், அரோமா விஜயலட்சுமி, அஸ்வின் குமார், ஆர் ரமேஷ், சரஸ்வதி நடராஜன், நிர்மலா ராஜசபாபதி, டாக்டர் ராஜா பாஸ்கர கணேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்துசென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி எம் ஜெயச்சந்திரன், கோவை ரெட் கிராஸ் சொசைட்டியின் ஷேர் பெர்சன்நந்தினி ரங்கசாமி, மோகன் சங்கர் ஆகியோர் கூறியதாவது:-
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் கோவை மாவட்ட கிளை கவுண்டம்பாளையத்தில் நவீன வசதிகளோடு புதிய ரத்த வங்கியை தொடங் கியுள்ளது.
இங்கு அதிக நவீன உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் தொடங்கப் பட்டுள்ள இந்த ரத்த வங்கி ரத்ததானம் கொடுப் பவர்களுக்கும் தானம் பெறுபவர்களுக்கும் இடையே உள்ள இடை வெளியை குறைக்கும் விதமாகவும் பராமரித்தல் மற்றும் குணப்படுத்துதலோடு உதவுவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த ரத்த வங்கி 24 மணி நேரமும் செயல்படும் மேலும் மருத்துவமனைகள் மற்றும் தனி நபர்களுக்கு சேவையை வழங் குகிறது. அரசு மருத்துவமனையில் இருந்து ரத்தம் தேவை என்று கோரிக்கை விடப்பட்டால் இலவசமாக ரத்தம் வழங் கப்படும். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.



