தூத்துக்குடி மாநக ராட்சி, தேசிய மாசு கட் டுப்பாட்டு வாரியம், தமிழ் நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமை படை சார்பில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி மில்லர் புரம் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளி முன்பு இருந்து துவங்கியது.
மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் சத்யராஜ் முன்னிலையில் விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் ஏபிசி வீரபாகு மெட்ரிக் பள்ளி, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 250 பேரும் ஆசிரியர்கள் 50 பேரும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் செல்வக்குமார், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி, நகர ஒருங் கிணைப்பாளர் அருள் சகாயம், சுற்றுச்சூழல் துறை உதவி இயக்குநர் ஹேமந்த் ஜோசன், இளநிலை பொறியாளர் முரளி கண்ணன், ஜெயப் பிரியா, எம்பவர் ட்ரஸ்ட் சங்கர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.