திருப்பூரில் ராயல் ஏஞ்சல் டுடோரியல் காலேஜ் சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டத்தை தாளாளர் கீதா தங்கராஜன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மாணவிகள் தாங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்றனர்.
மேலும் வரலாற்று சிறப்புமிக்க நம் நாட்டின் பெண் விடுதலைப் போராட்ட தியாகிகள் உயர்பதவியில் இருக்கும் பெண்களைப் பற்றிய பேச்சுப்போட்டி நடை பெற்றது.
மகளிர் தின விழா என்பதால் மாணவிகளே நடுவராக பொறுப்பேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரி சுகளை வழங்கினார்கள். மேலும் சான்றிதழும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி இறுதியில் கல்லூரி முதல்வர் டாக்டர் தங்கராஜன் நன்றி தெரிவித்தார்.