தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி கலையரங்கில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமை தாங்கினார்.
கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.ஐஸ்வர்யா, ஒட்டப்பிடாரம் யூனி யன் சேர்மன் ரமேஷ், கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜோன் கிறிஸ்டிபாய், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பேசுகையில்; கிராம சபை அமைப்பு என்பது இந்திய அரசியல் சாசனம் நமக்கு வழங்கியுள்ள மிக முக்கியமான உரிமை. கிராம வளர்ச்சி என்பது அனைத்து தரப்பினரும் இணைந்து ஆலோசித்து நமது தேவைகளை அரசின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டு மென வலியுறுத்தினார்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி விவசாயிகளுக்கு இடுபொருள் கள் மற்றும் விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டங்களை ஆட்சியர் வழங்கினார்.
அலுவலகத்தை ஆட்சியர் லட்சுமிபதி, ஊராட்சி தலைவர் கமலாதேவி யோகராஜ் முன்னிலையில் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி உதவி இயக்குநர் லோகநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல் காசிம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, கிரி, வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி தலைவர் கமலாதேவி யோகராஜ், துணை தலைவர் வீரமல்லு, வீர சக்கதேவி ஆலய குழு தலைவர் லயன் முருக பூபதி, துணை தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.