கோவை, ஆலாந்துறை அடுத்துள்ள மத்துவராயபுரம் சி.எஸ்.ஜ. கிறிஸ்துநாதர் ஆலயத்தின் பத்தாவது பிரதிஷ்டை அசனப் பண்டிகையை தொடர்ந்து 4500 பேர்களுக்கு அறுசுவை மற்றும் கறி விருந்து பரிமாறப்பட்டது. முன்னதாக ஆயர் இல்லத்தை கோவை திருமண்டல பேராயர் தீமோத்தி ரவீந்தர் பிரார்த்தனை செய்து திறந்து வைத்தார்.
இதில் கோவை திருமண்டல செயலர் பிரின்ஸ் கால்வின், பொருளாளர் அமிர்தம், ஆயர்கள் கிறிஸ்டோபர் ராஜேந்திரன், கருணாகரன், பிரபு சந்திரமோகன், செயலர் ஞானபிரகாசம், பொருளர் செல்வன் ஜெயசிங், திருமண்டல குழு உறுப்பினர்கள் ஜெபசிங், ஆனந்த் ஆசீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.