fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் தேசிய மின்சார சிக்கன வார விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடியில் தேசிய மின்சார சிக்கன வார விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடியில் தேசிய மின்சார சிக்கன நாள் மற்றும் வாரம் 14.12.2022 முதல் 20.12.2022 வரை அனுசரிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை பேரணி நடத்தப்பட்டது, இதனை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கிவைத்தார்.

பேரணியில் காமராஜ் கல்லூரி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, புனித மரியன்னை கலை கல்லூரி மற்றும் தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலுள்ள மாணவ&மாணவிகள் மற்றும் தூத்துக்குடி மின்பகிர்மான வட்டத்தில் பணிபுரியும் அனைத்து பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அனைவரும் மேற்பார்வை பொறியாளர் கு.குருவம்மாள் தலைமையில் கலந்து கொண்டனர்.

நகர் உபமின் நிலையம்

பேரணி தூத்துக்குடி உபமின்நிலையத்தில் இருந்து துவங்கி, புதிய பேருந்து நிலையம், போல்பேட்டை ரவுண்டானா வழியாக மீண்டும் நகர் உபமின் நிலையம் வந்தடைந்தது. போகும் வழியில மின் சிக்கனம் சம்பந்தமாக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. மின் சிக்கனம் தொடர்பான கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செயற்பொறியாளர் (பொது) ரெ.ரெமோனா, செயற்பொறியாளர்கள் போ.இராம்குமார், முத்துராஜ், மு.சகாபான், செ.விஜயசங்கரபாண்டியன், வெங்கடேஸ்வரன், உதவி செயற்பொறியாளர்கள் சுடலைமுத்து, உதவி செயற்பொறியாளர் உமையொருபாகம், பிரேம் சித்திவிநாயகமூர்த்தி, ஜெயக்குமார், வேலாயுதம், ஆறுமுகம், செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img