திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் பொது மற்றும் லேப்ராஸ் கோப்பி அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர். ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இம்முகாம் இன்றும் தொடர்ந்து முகாம் நடைபெற்றது.
என்.ஏ.பி.ஹெச் உயர்தர சிகிச்சை மற்றும் பாதுகாப்பிற்கான மிக உயரிய தேசிய அங்கீகாரம் பெற்ற மருத்துவமனையாக திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் கடந்த 19ம் தேதி தொடங்கியது.
இன்று 3 வது நாளாக முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் தைராய்டு சிகிச்சை, நீண்ட கால சர்க்கரை நோய், அடிக்கடி சிறுநீர் கழித்தல், கால் பாதம் எரிச்சல், உணர்வற்ற நிலை, அதிகப்படியான தாகம், அதிகப்படியான உணவு உண்ணுதல், ஆறாத புண், தூக்கமின்மை, எடை குறைதல், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், படபடப்பு, டென்ஷன், கை நடுக்கம், மனச்சோர்வு, இரத்த சோகை ஆகிய நோய் அறிகுறிகளுக்கு பொது மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் ரினு சித்ரா ஆலோசனைகள் வழங்கினர்.
மேலும் கண் சிகிச்சை முகாமில் கண் எரிச்சல், கண் வீக்கம், கண்புரை நோய், மாலைக்கண் நோய், கிட்ட பார்வை, தூரப்பார்வை போன்ற நோய் அறிகுறிகளுக்கு சீனியர் கண் மருத்துவர் டாக்டர் சீனிவாசன் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
என்.ஏ.பி.ஹெச். உயர்தர சிகிச்சை மற்றும் பாதுகாப்பிற்கான மிக உயரிய தேசிய அங்கீகாரம் பெற்றதன் மூலம் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்படும்.
இம்முகாமில் நேற்று முதல் நாளில் மட்டும் 300க்கும் மேற்கொண்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரிகள் ஸ்டீபன், ஜெயபிரகாஷ், தியாகு மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.