fbpx
Homeபிற செய்திகள்நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி சீர்மிக நகர திட்டத்தின்கீழ் காந்திபுரம், கிராஸ்கட் சாலை லட்சுமி காம்ப்ளக்ஸ் முதல் டவர் ஹவுஸ் வரை ரூ.3 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் 985 மீட்டர் தொலைவிற்கு மோட்டார் வாகனம் இல்லாத நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

உடன் உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img