fbpx
Homeபிற செய்திகள்கோவில், சிலையை காணவில்லை என கோவை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கோவில், சிலையை காணவில்லை என கோவை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரைவையினர் 5ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை காணவில்லை என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு ஒன்றை அளித்தனர்.

அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை தலைவர் மனுநீதிச்சோழன் தலைமையில் இந்திர வழிபாடு மீட்பு குழு தலைவர் நா.மனோகரன், சிவகுரு, உத்தமன், தீனா, ராம், மகேஷ், இளையராஜா, தங்கபாண்டி, சிவா உள்ளிட்டோர் மற்றும் மகளிர் அணியினர் பலர் அளித்த அந்த மனுவில் கூறி இருப்பதாவது:

திருச்சி குணசீலம்

திருச்சி குணசீலம் கிராமத்தில் 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஞானவர்மன் என்கிற சோழ மன்னரால் கட்டப்பட்ட பழமையான கற்கோவிலையும் – இந்திரன் சிலை உட்பட்ட பிரதான சின்னங்கள் அளிக்கப்பட்டு அந்த இடத்தில் இருந்த பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் மற்றும் தேவேந்திரன் சிலை மாயமாகியுள்ளது.

மேலும் அந்த இடத்தில் இருந்த கோவில்கள் முழுமையாக இடிக்கப்பட்டு, கோவையை சேர்ந்த தனியார் ஜூவல்லரி உரிமையாளரும், கோவிலின் அறங் காவலரும் கோவிலில் விதிகளை மீறி கோவிலை இடித்து கடத்தியும் மேலும் அரசின் வழிகாட்டுதலுக்கு புறம்பாகவும் நடந்துள்ளனர். எனவே அரசு நடவடிக்கை எடுத்து கோவில், சிலையை மீட்டுத் தரவேண்டும்.

படிக்க வேண்டும்

spot_img