fbpx
Homeபிற செய்திகள்திருச்சி அட்லஸ் மருத்துவமனை செவிலியர்கள் பேரணி

திருச்சி அட்லஸ் மருத்துவமனை செவிலியர்கள் பேரணி

உலக விபத்து மற்றும் உடற் காய தினத்தை முன்னிட்டு திருச்சி அட்லஸ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் பட்டர்பிளை கிளை இணைந்து நடத்திய பேரணியை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் ப்ரசிடெண்ட் கார்த்திக் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

இந்தப் பேரணியில் ரோட்டரி பட்டர்ஃபிளை தலைவர் ரோட்டரியன் சுபா, ரோட்டரி பட்டர்பிளை செயலாளர் ரோட்டரியன் பராசக்தி,ரோட்டரி பட்டர்பிளை பொருளாளர் ரோட்டரியன் ரேவதி மற்றும் அட்லஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மற்றும் எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் ஜெய்கிஸ், மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் கீதா சங்கரி மற்றும் எலும்பு மூட்டு மருத்துவர்கள் டாக்டர் பாலாஜி, டாக்டர் அபிலாஷ், டாக்டர் காலித்ஷரீப் மற்றும் செவிலியர்கள், செவிலிய மாணவர்கள், மாணவிகள் மருத்துவமனை ஊழியர்கள் சாலை விபத்து மற்றும் தீ விபத்துகளில் முன்னெச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பேரணியானது அட்லஸ் மருத்துவ மனையில் தொடங்கி கலைஞர் அறிவாலயம், கரூர் பைபாஸ் சாலை, கோகினூர், ஜோசப் கல்லூரி சத்திரம் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் அட்லஸ் மருத்துவமனையில் வந்தடைந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் சாலை விபத்து மற்றும் உடற்காய சம்பந்தப்பட்ட பதாகைகள் எடுத்துச் சென்றனர்.

படிக்க வேண்டும்

spot_img