129 வருடங்களாக இந்தியாவில் நறுமணம் மிக்க சுத்தமான கூட்டுப் பெருங்காயத்தை தயாரித்து வழங்கி வரும் லால்ஜி கோதோ நிறுவனம் தனது புதிய மசாலா பொருட்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
எல்ஜி பெருங்காய நிறுவனம் 1894 ஆம் ஆண்டு அதாவது சுதந்திர இந்தியாவிற்கும் தண்டியாத்திரை நடப்பதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு தனது மரபு ரீதியானவணிகப் பரம்பரை பயணத்தை பணிவோடுதொடர்ந்து வருகிறது. எல்ஜி பெருங்காயம் இந்திய தேசத்தின் சமையலறைகளில் பல தலைமுறைகளாய் தவிர்க்க முடியாத ஒரு மிகச்சிறந்த பொருளாக பரிணாம வளர்ச்சி பெற்று தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.
நுகர்வோர்களின் விருப் பம் மற்றும் தேவை அறிந்து அதற்கேற்ற வகையில் பாரம்பரிய முறையை அடிப்படையாகக் கொண்டு மசாலா பொருட்களை தயாரிக் கிறோம் என்று எல்ஜி பெருங்காய நிறுவனத்தின் ஆறாவது தலை முறையைச் சார்ந்த அதன் பங்குதாரர் ரித்தி மெர்ச் சண்ட் தெரிவிக்கின் றார்.
நூற்றாண்டுக்கு மேலான அனுபவத்தையும் தனித்துவத்தையும் பெற்றுள்ள எல்ஜி நிறுவனம் தற்போது புதிதாக ஐந்து நேரடி மசாலா தூள் வகைகளையும் ஆறு விதமான மசாலா கலப்பு பொடி வகைகளையும் அறி முகப்படுத்துகிறது.
புதிய மசாலா தூள் வகைகள் – மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள் மற்றும் காஷ்மீரி மிள காய் தூள்.
மசாலா பொடி வகைகள் – பிரியாணி மசாலா, சிக்கன் மசாலா, மட்டன் மசாலா, ரசப்பொடி. சாம்பார் பொடி மற்றும் கரம் மசாலா பொடி.
இது தொடர்பாக எல் ஜி நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரரான ஹீனா மெர்செண்ட் கூறுகையில், எல்ஜி நிறுவனம் இந்த புதிய அறிமுக மசாலா பொருட்கள் இந்திய சமையலறைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது நிச்சயம் ஒரு புத்துணர்ச்சி அளிக்க கூடிய புதிய பயணத்தின் துவக்கத்திற்கான அறிகுறி, புதிய பொருட்களின் அறிமுகத்திற்கான சந்தை விரிவாக்கம் எல்ஜி நிறுவனத்தின் முக்கிய பண்புக்கூறுகளை நிச்சயம் நீர்த்துப்போக செய்யாது அதை மேலும் வலுப்படுத்தும் என்றும் எங்கள் வாடிக்கையாளர்களின் அன்பின் மீதும் விசுவாசத்தின் மீதும் எப்போதும் நம்பிக்கை வைத்துள்ளோம் நாங்கள் நூற்றாண்டு கடந்து இன்று வரை நிலைத்து நிற்பதற்கு அவர்களது பேராதரவு தான் காரணம், என தெரிவித்தார்.