தேர்வுத் தயாரிப்பு சேவைகளில் இந்தியாவின் தலைவரான ‘ஆகாஷ் பைஜூஸ்’, திருச்சி ராப்பள்ளியில் அதன் இரண்டாவது புதிய வகுப்பறை மையத்தைத் திறந்துள்ளது.
ஆகாஷ் பைஜுஸ் விரிவடைந்து வரும் பான்-இந்தியா நெட்வொர்க் மையங்களுக்கு இந்த புதிய சேர்த்தல், தற்போது 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 325+ ஆக உள்ளது.
முதல் மையம்
SD டவர்ஸ், எண்.75, திருச்சி -தஞ்சாவூர் மெயின் ரோடு, கைலாஷ் நகர், திருச்சியில் அமைந்துள்ள இந்த 2-வது மையம் 13 வகுப்பறைகளைக் கொண் டுள்ளது. முதல் மையம் திருச்சி அண்ணாமலை நகரில் அமைந்துள்ளது.
ஆகாஷ் பைஜூஸ் மண் டல இயக்குநர் தீரஜ் குமார் மிஸ்ரா புதிய மையத்தை தொடங்கி வைத்து பேசு கையில், “ஆகாஷ் பைஜூஸ் ஒவ்வொரு ஆண்டும் 3.30 லட்சம் மாணவர்களுக்கு நீட், ஐஐடி-ஜேஇஇ, ஒலிம்பியாட்ஸ் மற்றும் அடித்தளத் திட்டங்களுக்கான முடிவு சார்ந்த பயிற்சி சேவைகளை வழங்குகிறது.
மாணவர்கள் உடனடி அட்மிஷன் கம் ஸ்காலர்ஷிப் தேர்வு (iACST), ACST ஆகியவற்றில் சேரலாம் மற்றும் நேரடியாக தங்களின் மதிப்பெண் பட்டியலைப் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆகாஷ் பைஜூவின் தேசிய திறமை வேட்டைத் தேர்வில் (Anthe) பதிவு செய்யலாம்” என்றார்.
ஆகாஷ் பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் மகேஸ்வரி கூறுகையில், “ எங்கள் முக்கிய வேறுபாடு பாடநெறி உள்ளடக்கத்தின் தரம் மட்டுமல்ல. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளுக்கு இடையே சரியான சமநிலையைக் குறிக்கும் அதன் விநியோகமும் ஆகும்” என்றார்.